அன்பு உறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறேன்-ரமணி,சேர்வைகாரன்பட்டி-வடகாடு

Saturday, November 12, 2011


என் சமூகம் என்று எடுத்துக்கொண்டால் "தமிழ் சமூகம்" என்றுதான் நான் சொல்வேன்.ஏன் என்றால் நாம் வீட்டை விட்டு அசலூருக்கு (எங்குவேண்டுமானாலும்)செல்லும் போது பலவிதமான நபர்களை சந்திக்கிறோம்.அவர்களிடம் அந்தந்த விசயங்களை முடிந்தபின்பு இறுதியாக நம்முடைய வீட்டுக்கு வந்தடைகிறோம்.மொத்தத்தில் ஒரே மொழியின் கீழ் வந்தடைகிறோம்!.ஆக நாம் கடைசியாக அடைந்துகொள்ளும் கூ(வீ)டு நம்மினத்தோடு முடிவடைகிறது! அந்த வகையில் நம்முடைய திருமண விழாவுக்கு மட்டும் சாதி அமைப்போடு ஒத்துபோகிறோம்! என்பது என் கருத்து.மற்றபடி எதுக்கெடுத்தாலும் சாதியையும் மதத்தினையும் கையில் எடுத்து கொ(ல்)ள்வது சாலச்சிறந்தது அல்ல!

பல நேரங்களில் என் சமூகத்தின் வாயிலாக பிரத்தியேக உதவிகளும் ஒருசிலரால் உபத்திரங்களும் பெற்றுள்ள நிலையில் என் சமூகத்திற்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்!

சமூகத்துடனான உறவு எப்படி இருக்கவேண்டும் என்றால்?
இந்த மரத்தை பாருங்கள்...எங்கேயோ விதைக்கப்பட்ட இந்த மரம் அது வளர்ந்து மகசூலை கொடுக்கும் அளவிற்கு வந்த பின்பு அந்த மரத்தை அப்படியே வேரோடு பிடுங்கி கொண்டுவந்து மற்றொரு இடத்தில் நடுகிறார்கள்.அந்த மற்றொரு இடமானது ஒருவேளை அமெரிக்காவாக இருக்கலாம்,இந்தியாவாக இருக்கலாம் அல்லது அரபு நாடாக கூட இருக்கலாம் ஆனால் அந்த மரத்தின் சீதோஷ நிலையை நன்கு அறிந்து அதற்க்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளவான முறையில் கொடுக்கப்பட்டு அதை மற்றொரு இடத்தில் நடுகிறார்கள்.அந்த மரமும் நடப்பட்ட சீதோஷ நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு ஒரு சில மாற்றங்களுடன் தன்னை அங்கேயே ஊன்றிக்கொள்கிறது.சுற்றத்தாரையும் தன்னையும் செம்மைப்படுத்திக்கொண்ட ஒரு வழமான மரம்.இதுபோல நாமும் செல்லும் இடத்தில் அவ்விடத்தின் சூழ்நிலைக்கேற்ப அனைத்து விசயங்களிலும் வளைந்து கொடுத்து வழமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.

கேட்டுப்போவவன் விட்டுக்கொடுப்பதில்லை!
விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை!!-சான்றோர் வாக்கு


ஒருசில அறிவி ஜீவிகள் தன்னையும் மாற்றிக்கொள்ளாமல் மற்றவர்களுடனும் ஒத்துப்போகாமல்,நான் பிறந்த இடத்தில் அப்படி இருந்தேன்! இப்படி திரிந்தேன்! என்னை சுற்றி பச்சை பசென்னுதான் இருக்கும்! ஆனால் நீங்க என்ன இந்த நடு வீதியிலே என்னை கொண்டு வந்து நிக்க வைக்கிறீங்க? என்றுஏதோ ஒரு சில காரணங்களை மனதில் வைத்துக்கொண்டு வீண் பிடிவாதத்தால் தன்னையும் அழித்துக்கொண்டு அவர்களின் சுற்றத்தாரையும் அழிக்கும் வல்லமை?பெற்றுள்ளார்கள் ....இந்த பாழாய்போன அழகற்ற மரம் போல.0 comments:

Post a Comment