- "திரைகடல் ஓடி திரவியம் தேடு"-என்பது நம் முன்னோர்களின் வாக்கு அந்த வகையில் நானும் என் கூட்டாளிகளும் இவ்வுலகம் முழுதும் பரவியுள்ளோம்! ஆம் கொஞ்ச நாட்கள் எங்களை அந்தந்த நாடுகளிடம் அடகு வைத்துள்ளோம்.என் தாய்நாட்டில் எங்களின் தேவை பூர்த்தியானபின் தானேவே என் இனத்தின் கூட்டுக்குள் வந்தடைவோம்!அதுவரை எங்களை அரவணைக்கும் NRI அமைச்சகத்திற்கும் இந்தியாவில் உள்ள கூட்டாளிகளுக்கும் நன்றி!
Major Task for Job seeker...
வெளிநாட்டுக்கு போறதுக்கு முன்னாலே கீழ்கண்ட விசயங்களை முடித்து வைத்துக்கொள்ளவும்....
நீங்கள் பட்டம்(Degree) பெற்றவரா?அல்லது பட்டயம்(Diploma) பெற்றவரா?
அப்போ நீங்க செய்யவேண்டியது சில முக்கியமான வேலைகள் உள்ளன... டிகிரி ஹோல்டர் ஆகின் உங்கள் கைக்கு convocation வந்தடைந்ததும் உடனே இரண்டு வேலைகளை முடிந்தது வைத்துக்கொள்ளவும்...
- உங்களது convocation எடுத்துகொண்டு நேரா தமிழ்நாடு தலைமச்செயலகத்திற்கு போங்க...
அங்கே Public (Foreigners)Department's for Attestationஎன்ற Dept ஒன்று இருக்கும்.அங்கே உங்களது convocation /diploma certificate Attestation பண்ணனும்.இந்த வேலைதான் மிக மிக படு வேகமா? நடக்கும்? ஏன்னா நம்ப அரசாங்க அலுவலாச்சே! அதனாலே அங்கெ கொஞ்சம் இல்லை இல்லை நெறையாவே கவனிக்கணும்.புரிஞ்சிருக்குமே!
ஓகே அடுத்து இந்த வேலை எப்படி நடக்குதுன்னு கொஞ்சம் பாப்போம்...
நாம் கொடுத்த convocation நகல் ஒன்றையும் தலைமைச்செயலகத்தின் முத்திரையுடன் ஒரு request formமும் சம்பந்தப்பட்ட university-கோ அல்லது technical council-கோ லெட்டர் ஒன்றை அனுப்புவார்கள்.எப்போ அனுப்புவார்கள் என்று தெரியாதுங்கோ!ஆண்டவன் புண்ணியத்திலே அந்த லெட்டர் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு-க்கு சென்றவுடன் universityயில் Dept of certificates for genuine என்று ஒன்று இருக்கும் நம்பளோட certificate உண்மைதானா என்று university-யில் உள்ள records-ன் படி உங்களது certificate genuine என்றால்! தலைமை செயலகத்தின் லெட்டரில் இந்த certificte genuine மற்றும் genuine நம்பர் போன்ற விபரங்களை குறிப்பிட்டு அந்த லட்டரை தமிழ்நாடு தலைமைசெயலகத்துக்கு அனுப்பி வைக்கும்.பின்னர் அந்த லெட்டர் பல மாதமா ஹோமாவிலே இருக்கும்?ஒருவேளை அந்த ஆபிசில் எல்லோருக்கும் ஞானோதயம் வந்து எல்லா கவரையும் ஒரே நேரத்தில் பிரிந்து அதில் எது உண்மை? எது போலி? என்று தரம் பிரிப்பார்கள்.அந்த genuine certificte யின் அடிப்படையில் நம்ப convocation -யில் Public (Foreigners)Department கையெழுத்திடும் இதுவே முதல் படி இந்த வேலைக்கு குறைந்தது சுமார் 3 மாதம் ஆகலாம் அல்லது அதற்க்கு மேலும் ஆகலாம்.
Website external source for :http://www.tn.gov.in/appforms/Authentication.pdf
- Ministry of External Affairs Branch Secretariat,
68, College Road, E.V.K. Sampath Mallaligai,
7th Floor, Numgambakkam,
Chennai -600006.
Phone: 044-28252200, 28251323
Fax: 044-28251034
Email: usbs.chennai@mea.gov.in - Home Dept யில் attestation முடிந்த பிறகு அந்த certificate-டை எடுத்துக்கொண்டு இந்த | முகவரிக்கு சென்றால் அங்கு ஒரு attestion செய்வார்கள். இவ்விரண்டையும் முடிந்து வைத்திருப்பது அவசியம் ஏனென்றால் எந்நேரத்திலும் வெளிநாடு வாய்ப்பு கிடைத்தால் உடனே எந்த நாட்டில் வேலை கிடைக்குதோ அந்த நாட்டின் embassy யில் மூன்றாவதாக attestion செய்யவேண்டும் ...இவ்வாறு முடிந்த பின்புதான் அந்த certificate முழுமையாக உண்மையானது என்றும் அதன் பேரில் விசா கொடுப்பார்கள்.அதனால் மேற்கண்ட இரண்டு வேலைகளை முடித்து வைத்திருப்பது நல்லது.தவறும் பட்சத்தில் சிலநேரம் கால தாமதம் ஆகும் போது வேலை கைமாற வாய்ப்பு உள்ளது.ஒருசில நாடுகளில் Projectவேலைக்கு இவ்வனைத்தும் தேவையில்லை! முழு work permit விசா கிடைக்க வேண்டுமாயின் அவசியம் மேற்கண்ட மூன்று attestation தேவை.
website external source :http://www.mea.gov.in/mystart.php?id=8801
Degree Certificate attestation sample view.....
Front page view
Behind of the certificate
0 comments:
Post a Comment